இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் வாரிசுகள் 90 பேருக்கு லேப்டாப்- ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வாரிசுகள் 90 பேருக்கு பிளஸ்டூவில் அதிக மதிப் பெண் பெற்றதைப் பாராட்டி லேப்டாப் கணினிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், "மேல்நிலை பள்ளித்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் திருக்கோவில் பணியாளர்களின் மகன் அல்லது மகளுக்கு, அவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், முதல் 100 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்'' என்றும், "அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் தொழில் சார்ந்த பட்டப்படிப்பு பயிலும் திருக்கோவில் பணியாளர்களின் மகன் அல்லது மகளுக்கு முதலாண்டு கல்விக் கட்டணத்தில் 25 சதவிகித தொகை நிதியுதவியாக வழங்கப்படும்'' என்றும் அறிவித்தார்.
இதன்படி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பில் மடிக்கணினிகளும், மூன்று மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தில் 25 சதவிகித தொகையாக ரூ.5,325 நிதியுதவியும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் க.முத்துசாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ப.ரா.சம்பத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications