கோயம்பேடு பஸ் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்-ஆந்திர வாலிபர் கைது
சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டு 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்றிரவு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மதுரை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் இருவர் கையில் பார்சலுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் விசாரிக்க முயன்றபோது தப்பியோடினர். இதில் பார்சலுடன் இருந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் தப்பிவிட்டார்.
அந்த நபர் வைத்திருந்த பார்சலை சோதனையிட்டபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், அவரது பெயர் கர்ணா பாபு (30) என்றும் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
தப்பியோடிய அப்பாராவ் என்பவருடன் 30 கிலோ கஞ்சாவுடன் சென்னை வந்த இவர் அதை மதுரைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். கர்ணாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அப்பாராவைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications