விமான விபத்து - பிரதமர், சோனியா அதிர்ச்சி - எதியூரப்பா மங்களூர் விரைகிறார்
மங்களூர்: மங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 160 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, கர்நாடக முதல்வர் எதியூரப்பா அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து பிரதமர் தெரிவிக்கையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேலுடன் பேசினேன். பிரபுல் படேல் மங்களூர் விரைகிறார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிதியும் அளிக்கப்படும் என்றார்.
காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியும், இந்த சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். காயமடைந்துள்ளோர் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறுகையில், இதுமிகப் பெரிய சோகச் சம்பவம். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விமானத்தில் 160 பேர் இருந்ததாக தெரிகிறது. நான் ஹெலிகாப்டர் மூலம் மங்களூர் செல்கிறேன்.
விபத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் வந்துள்ளன என்றார்.
மங்களூரில் பிரபுல் படேல்
இதற்கிடையே, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல், விபத்து நடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட அவர் விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications