அமைச்சர் பொன்முடி தந்தை மரணம்: ஸ்டாலின் அஞ்சலி
விழுப்புரம்: தமிழக உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பொன்முடியின் தந்தை மரணமடைந்தார்.
பொன்முடியின் தந்தை கந்தசாமி (85) கடந்த ஒரு வாரமாக உடல்நலமின்றி விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் சிகிச்சை பலனின்றி கந்தசாமி இன்று காலை மரணமடைந்தார். அவரது உடல் விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தகவல் அறிந்த ஏராளமான திமுகவினர் மற்றும் கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், சக அமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் கருணாநிதி தொலைபேசி மூலம் பொன்முடிக்கு ஆறுதல் கூறினார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கந்தசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பொன்முடிக்கு ஆறுதல் கூறினார்.
அதே போல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் தொலைபேசியில் பொன்முடிக்கு ஆறுதல் கூறினர்.
கந்தசாமியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டுகிறது.
கந்தசாமி, சித்தலிங்க மடத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மரகதமும் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications