மக்கள் தொகை கணெக்கெடுப்பில் தமிழர்கள் என்றே பதிவு செய்யுங்கள்!-சீமான்

Subscribe to Oneindia Tamil

Seeman
சென்னை: மக்கள் தொகை கணெக்கெடுப்பின்போது தங்களைத் தமிழர்கள் என்றே பதிவு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி 45 நாட்கள் நடைபெற இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைத்து தமிழர்களும் தவறாது தங்கள் இனத்தை பதிவு செய்தல் அவசியம்.

இனம் என்பதில் என்ன பதிவு பண்ணுவது என்ற குழப்பம் இங்கு தமிழர்களிடையே உள்ளது. இங்கு இந்தியன் என்று ஒரு இனம் இல்லை. நாம் அனைவரும் இந்தியாவின் நிலப்பரப்பில் வாழும் குடிமக்கள் மட்டுமே.
இதைத்தான் இந்திய அரசியல் சட்டமும் சொல்கிறது.

அதைப்போல நாம் திராவிடரும் இல்லை. ஆரியம் என்ற சொல்லுக்கு எதிரான சொல்லாடலாக திராவிடம் என்ற சொல்லை வரலாற்றாசிரியர் கால்டுவெல் பயன்படுத்தினார்.

ஆங்கிலேயன் ஒருவன் பயன்படுத்திய சொல் எப்படி தமிழனின் இனமாக மாறும்?. திராவிடர் என்றால் யார்? அப்படி ஒரு இனம் இருக்கிறதா?அதற்கு மொழி இருக்கிறதா?.

தமிழ்நாட்டில் மட்டும் தானே திராவிட என்ற சொல்லை அனைவரும் தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் என்று சொல்கிறார்கள்?.

ஆக, தமிழ்நாட்டில் இந்தியன் என்று ஒரு இனம் இல்லை. திராவிடன் என்று ஒரு இனமும் இல்லை. தமிழன் என்ற இனம் மட்டுமே உண்டு.

நாம் அனைவரும் தமிழர்கள். உலகின் தொன்மையான குடி. ஆகவே நாம் நமது உரிமைகளைக் கோரிப் பெறுவதற்கும் நாம் இனத்தால் ஒன்றுபடுவதற்கும் நம்மை தமிழர்கள் என்று உணார்தல் அவசியம்.

ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்று உறுதியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று சீமான் கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+