மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் என்றாலே வீச்சரிவாள்தானா?-ஹைகோர்ட் நீதிபதி பரபரப்பு பேச்சு
திண்டுக்கல்: மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை நினைத்தாலே, வீச்சரிவாள் கலாச்சாரம்தான் நினைவுக்கு வருகிறது என்று சென்னை உயர்நீதி்மன்ற நீதிபதி சுதாகர் பரபரப்பாக பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்பு விழா நடந்தது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபே தர்ம ராவ், கல்வெட்டை திறந்து வைத்தார்.
நீதிபதி சுதாகர் நிகழ்ச்சியில் பேசுகையில்,
ஒட்டன்சத்திரத்தில் 1,610 கிரிமினல் வழக்குகள், 116 செக் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தும், இங்கு கோர்ட் திறப்பதில் ஏனோ தாமதம் ஏற்பட்டது. வக்கீல்கள் முழு முயற்சி செய்யவில்லை.
கோர்ட் புறக்கணிப்பை காரணம் காட்டி, கோர்ட் எதற்கு என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மக்கள் நலனுக்காக, வக்கீல்கள் மற்றும் போலீசார் இணைந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்கள் என்றாலே, வீச்சரிவாள், வேல்கம்பு கலாசாரம் தான் நினைவுக்கு வருகிறது.
இதை மாற்ற வேண்டும். சட்டரீதியாக உங்கள் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில், அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பை உயர்நீதிமன்றம் தரும் என்றார் சுதாகர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications