இன்னொரு நிறுவனம் மூலம் ஐபிஎல் அணியை வாங்க முயன்ற பவார்!

புனேவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான சிட்டி கார்ப்பரேசனில் சரத் பவார் குடும்பத்துக்கு 33.6 லட்சம் பங்குகள் உள்ளன. இந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ரூ. 1,176 கோடிக்கு ஐபிஎல் அணியை வாங்க ஏலத்தில் பங்கேற்றது.
இந்த நிறுவனத்தின் சரத் பவார் குடும்பம் மற்ற இரண்டு நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்துள்ளது. சரத் பவார், அவரது மனைவி பிரதீபா, மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே ஆகியோருக்குச் சொந்தமான லேப் பைனான்ஸ் அண்ட் கன்சல்டன்சி மற்றும் நம்ரதா பிலிம் எண்டர்பிரைஸ் ஆகிய நிறுவனங்கள் தான் இந்த சிட்டி காப்பரேசன் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகளை வாங்கியுள்ளன.
புனே ஐபிஎல் அணிகளை வாங்க இந்த சிட்டி கார்ப்பரேசன் நிறுவனம் போட்டியிட்டது. ஆனால், சஹாரா நிறுவனம் ரூ. 1,720 கோடியைத் தந்து புனே அணியை வாங்கியதால், இந்த நிறுவனம் ஏலத்தில் தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த மார்ச் மாதம் ஐபிஎல் ஏல விவகாரத்தில் சரத் பவாரின் குடும்பத்தின் பெயர் அடிபட்டபோது, தங்களுக்கும் ஏலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவரது மகள் சுப்ரியா கூறியது குறிப்பிடத்தக்கது. அதே போல தனது மனசாட்சி மிக சுத்தமாக இருப்பதாகவும், ஐபிஎல் ஏலத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சரத் பவாரும் கூறியிருந்தார்.
ஆனால், சிட்டி கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் மறைமுகமாக ஐபிஎல் அணியை வாங்க சரத் பவார் முயன்ற விவகாரம் இப்போது வெளியில் வந்துவிட்டது.
இதையடுத்து இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய சரத்பவார்,
இன்று வெளியாகி உள்ள செய்திகள் புதிதல்ல. இரு மாதங்களுக்கு முன்பே வெளியான தகவல்தான். அதற்கு நான் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டேன். அதையேதான் இப்போதும் கூறுகிறேன். எந்த ஒரு ஐபிஎல் அணியிலும் என் குடும்பத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு இல்லை.
ஏலம் எடுப்பதில் முறைகேடு இருப்பதாக கருதினால், மத்திய மாநில அரசுகள் உயர்மட்ட விசாணைக்கு உத்தரவிடலாம் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications