உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் தமிழ் வாழ்க போர்டு வைக்க ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழ் வாழ்க மின்னொளிப் பலகையை வைக்க வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக துணை-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டதொடரில் 26.4.2010 அன்று ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறைக்கான அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார்.
அதில் ஒரு அறிவிப்பாக உயர்தனி செம்மொழியாம் நம் தமிழ் மொழியை போற்றும் வகையில், உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றினுடைய அலுவலக கட்டிடங்களின் மீது தமிழ் வாழ்க என்ற சொல் பொறித்த மின்னொளிப்பலகை நிறுவப்படும்'' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அலுவலக கட்டிடங்களின் மீது தமிழ் வாழ்க' என்ற சொல் பொறித்த மின்னொளிப்பலகை (நியான் விளக்குகள்) விரைவில் நிறுவிட வேண்டுமென்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் இதற்கான விசாரணை நேற்று (3-ந்தேதி) ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணைகளில் தமிழ் வாழ்க என்ற சொல் பொறித்த இந்த மின்னொளிப்பலகை 12 அடி நீளம், 3 அடி அகலத்திற்கு குறையாததாக ஒளிரும் எழுத்துக்களை கொண்டதாக பார்வைக்கு நன்கு தெரியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மின்னொளிப்பலகைகளை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், தத்தம் நிதியில் இருந்து அமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. மேலும், இவ்வாறு அமைக்கப்படுகின்ற மின்னொளிப் பலகைகளை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நிறைவு பெறுகின்ற 27.6.2010 அன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்றும் இந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications