அரசு மதுபான கடையி்ல் தீ விபத்து - ரூ. 7 லட்சம் மது பாட்டில்கள் சாம்பல்
புளியரை: தமிழக,கேரள எல்லைப் பகுதியான புளியரையில், அரசு மதுபான கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தீயில் எரிந்து நாசமாயின.
தமிழக-கேரள எல்லைபகுதியான புளியரையில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மக் கடை எண்-10886 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை இரு மாநில எல்லைபகுதியில் இருப்பதாலும், தென்மேற்கு பருவ மழை சீசன் தொடங்க உள்ளதையும் கருத்தில் கொண்டு கடந்த 2ம் தேதி ரூ.6 லட்சத்து 96ஆயிரத்து 440 ரூபாய்க்கு மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு அடுக்கப்பட்டன. மேலும் ஏற்கனவே பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களும் இங்கு ஸ்டாக் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு பணியாளர்கள் மூக்கன், ராஜ் நாராயணன் ஆகியோர் கடையை அடைத்து விட்டு சென்று விட்டனர். இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கடையின் உள்பகுதியில் தீ கொளுத்துவிட்டு எரிவதை கண்ட ஒரூ லாரி ஓட்டுனர் அருகிலுள்ள அரசு சோதனை சாவடிக்கு சென்று கூறியுள்ளார். உடன் அவர்கள் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கூறவே அதிகாலையில் தீயணைப்பு துறையினரும், மின் துறையினர் வந்து மின் சப்ளையை துண்டித்து தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தை தாசில்தார் ராமையா, டாஸ்மக் மண்டல மேலாளர் கருணாகரன், இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, சண்முகம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், சேதமடைந்த மதுபாட்டில்கள் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications