ராஜ்யசபா தேர்தல் - மனுத்தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்
சென்னை தமிழகத்தில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலுக்கு 6 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்றோடு மனுத் தாக்கல் முடிந்ததால் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
ராஜ்யசபாவுக்கு தமிழகத்திலிருந்து 6 காலியிடங்கள் ஏற்பட்டன. இதற்கான வேட்பு மனு தாக்கல் மே 31ம் தேதி தொடங்கியது.
இதில் திமுக சார்பில் கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, செல்வகணபதி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பனும், அதிமுக சார்பில் கே.வி.ராமலிங்கம், மனோஜ் பாண்டியனும் போட்டியிடுகின்றனர். இன்று காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் மனு தாக்கல் செய்தார்.
இன்று பிற்பகலுடன் மனுத் தாக்கல் முடிவடைந்தது. இந்த 6 பேர் தவிர 3 சுயேச்சைகளும் மனுத் தாக்கல்செய்துள்ளனர். மனுக்களை திரும்ப பெற 10-ந்தேதி கடைசி நாள். சுயேச்சைகளின் மனுவை முன்மொழிந்து எந்த எம்.எல்.ஏவும் சான்றளிக்கவில்லை. இதனால், அவர்களது மனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடியாகி விடும். இதையடுத்து கட்சிகளின் சார்பில் மனு தாக்கல் செய்துள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.
வருகிற 10ம் தேதி 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.
முன்னதாக, காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சனம் நாச்சியப்பன் தமிழக சட்ட மன்ற செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான செல்வராஜிடம் மனு தாக்கல் செய்தார்.
நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி முன்னிலை வகித்தார். துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்பட காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications