தூக்கில் தொங்கிய நடிகை-நடன இயக்குனர் தப்பியோட்டம்
சென்னை: தமிழ் திரைப்பட நடன இயக்குநர் ஷான் என்பவருடன் ஒரு கிளப்பில் தங்கியிருந்த தெலுங்கு டிவி நடிகை மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். ஷான் தலைமறைவாகிவிட்டார்.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவக் சசிரேகா (20). டிவி நடிகையான இவர் தெலுங்கில் சில டி.வி. தொடர்களில் நடித்து வந்தார்.
இந் நிலையில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேட, சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரில் தனது தாய், தந்தையுடன் குடியேறினார்.
சசிரேகாவின் தந்தை சீனிவாச ராவ் மிளகாய் மண்டியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.
சசிரேகாவுக்கு மடிப்பாக்கம் அருகே உள்ள கீழ்க்கட்டளையைச் சேர்ந்த ஷான் (26) என்பவர் சினிமாவில் நடிக்க நடனம் கற்றுக் கொடுத்தார். அப்போது அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டது.
இந் நிலையில் கடந்த 6ம் தேதி சசிரேகாவும், ஷானும் சென்னை ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தங்குவதற்காக வந்தனர்.
இந்த பண்ணை வீட்டில் தங்க வேண்டுமானால் அதில் உறுப்பினராக இருக்க வேண்டும். இதனால் அதில் ஏற்கனவே உறுப்பினராக உள்ள அருள்ராஜ் என்பவரது உதவியால் இருவரும் தங்கினர்.
அந்த அறைக்கு ஒரு நாளைக்கு ரூ. 1,500 வாடகை.
நேற்று மாலை 4.30 மணியளவில் ஷான் வெளியே சென்றார். போகும் போது பண்ணை வீடு ஊழியர் மணியிடம், சசிரேகாவுக்கு ஷூட்டிங் இருப்பதால் தற்போது தூங்கி ஓய்வு எடுப்பதாகவும் இப்போதைக்கு எழுப்ப வேண்டாம் என்றும் கூறிவிட்டுச் சென்றுள்ளா.
ஆனால், இரவு வரை ஷான் திரும்பவில்லை. சசிரேகாவும் கதவைத் திறக்கவில்லை. இந் நிலையில் ஊழியர் மணி சாப்பாடு எடுத்துக் கொண்டு சசிரேகாவின் அறைக்குச் சென்றார். அந்த அறை கதவு உள்புறம் தாழிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அறையின் பின்புற ஜன்னல் வழியாக சென்று அறைக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது சசிரேகா மின் விசிறியில், தனது துப்பட்டாவில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. துரைப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறையில் பீர் பாட்டில்கள் கிடந்தன. இதையடுத்து ஷானை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் சசிரேகாவின் மரணத்தில் மர்மம் நிலவுகிறது.
சசிரேகாவுக்கு தமிழ்ப் படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அவ்வப்போது அவருடன் தனிமையில் தங்கியிருந்து வநதுள்ளார் ஷான் என்று தெரிகிறது.
சசிரேகாவை ஷான் கொலை செய்தாரா அல்லது சசிரேகாவே தூக்கில் தொங்கினாரா என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது. ஷானை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications