செம்மொழி மாநாடு: 30 தமிழ் விண்வெளி விஞ்ஞானிகள்- தமிழில் ஆய்வரங்கம்

நிலவுக்கு இந்தியா அனுப்பிய செயற்கைக் கோளான சந்திரயான்-1 திட்டத்தின் இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
உலகமே கண்டு வியக்கும் வகையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பண்டைய கால பொருட்கள், இலக்கிய காட்சிகள் இடம் பெறுகின்றன.
பல்வேறு ஆய்வரங்கங்கள் நடைபெறவுள்ளன. அதில் விண்வெளி தொடர்பான ஆய்வரங்கம் 24ம் தேதி நடைபெறும்.
இதில் அமெரிக்காவின் நாஸா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த 30 தமிழ் விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.
இவர்கள் அனைவருமே தமிழிலேயே படித்து உலக அளவில் சாதனை படைத்து புகழ் பெற்றவர்கள். தமிழ் படித்தவர்கள் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் அறிவியல்- தொழில்நுட்பத்திலும் சாதிக்க முடியும் என்பது அறிவியல் அரங்கத்தின் மூலம் நிரூபிக்கப்படும்.
ஆய்வரங்கத்தின் விவாதங்கள் அனைத்தும் தாய்மொழி தமிழிலேயே இடம்பெறும்.
தாய்மொழியில் படித்தால்தான் அறிவியலில் சிறப்பாக சிந்திக்க முடியும். தாய்மொழியில் படித்தால்தான் சுயசிந்தனை அதிகரிக்கும்.
இந்த ஆய்வரங்கத்தை ஒட்டி விண்வெளி ஆராய்ச்சி குறித்த கண்காட்சியும் இடம் பெறும்.
சந்திரனுக்கு நாம் செயற்கைக் கோளை அனுப்பும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தாலும், விமானங்கள் தயாரிப்பதற்கு வெளிநாடுகளின் உதவியை நாம் தேடும் நிலையில் தான் உள்ளோம். இந்த நிலை மாற வேண்டும். நம் நாட்டிலேயே விமானங்கள் தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்.
இந்தியாவில் விமானத் தயாரிப்பில் ஈடுபட பல நிறுவனங்கள் முன்வந்தாலும் நம்மி்ல் விமானத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. வரும் காலங்களில் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி்ஸ் படித்த மாணவர்கள் அதிக அளவில் தேவைப்படுவர். இதில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
திருவனந்தபுரத்தில் இந்த ஆண்டு இஸ்ரோ சார்பில் விண்வெளி தொடர்பான என்ஜினீயரிங் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 400 இடங்கள் உள்ளன. இந்த படிப்பிற்கு இந்தியா முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications