காங்கிரசில் வன்னியர்கள் புறக்கணிப்பு: ராமதாஸ் சம்மந்தி கிருஷ்ணசாமி
சென்னை: காங்கிரஸ் கட்சியில் தொடக்க காலம் முதலே வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் சம்மந்த்தியுமான கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் மாமனாரான இவர், வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தலைமையில் நடந்த இந்த விழாவில் நூல்களை ராமதாஸ் வெளியிட, கிருஷ்ணசாமி பெற்றுக் கொண்டார். பின்னர் கிருஷ்ணசாமி பேசுகையில்,
1952ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அதைத் தடுத்து, காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க உதவியவர்கள் வன்னியர்கள்தான்.
வன்னியர்கள் இல்லையெனில், இன்று இங்கு காங்கிரஸ் கட்சி இல்லை. ஆனால், அப்படிப்பட்ட வன்னியர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் உரிய பிரதிநிதித்துவம் அன்றும் இருந்ததில்லை. இன்றும் இல்லை என்றார்.
நிகழ்ச்சியில் அன்புமணி பேசுகையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, நான் செய்த பணிகளைப் பாராட்டி 3 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டன. ஐ.நா. சபை பொதுச் செயலர் பான்-கி-மூன், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் போன்றவர்கள் நேரில் பாராட்டினர்.
இன்று தமிழகத்தில் ஓடும் 108 எண் கொண்ட ஆம்புலன்ஸ் வண்டிகள் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டவை. தமிழ்நாடு மட்டுமல்ல, இன்று 14 மாநிலங்களில் ஓடும் 108 ஆம்புலன்ஸ் வண்டிகளை அமைச்சராக இருந்தபோது, நான்தான் அறிமுகம் செய்தேன் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications