சென்னை மாநில கல்லூரி பேராசிரியர் மீது 4 பேராசிரியைகள் செக்ஸ்' புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநில கல்லூரியைச் சேர்ந்த இன்னொரு பேராசிரியர் மீதும் 4 பேராசிரியைகள் செக்ஸ் தொல்லை புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை மாநில கல்லூரி பேராசிரியர் மாதவன் என்பவர் சமீபத்தில் தன்னிடம் பி.எச்டி. பயின்ற மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந் நிலையில், மேலும் ஒரு பேராசிரியர் மீது அதே கல்லூரியில் பணியாற்றும் 4 பேராசிரியைகள் செக்ஸ் புகார் கொடுத்துள்ளனர்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து அவர்கள் தந்த புகாரில், குறிப்பிட்ட அந்த பேராசிரியர் தங்களை தகாத வார்த்தைகளை சொல்லி அடிக்கடி திட்டுவதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், மேலும் தகாத செயல்களில் ஈடுபட முயற்சிப்பதாகவும் பேராசிரியைகள் தங்களது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த திருவல்லிக்கேணி துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதுவரை குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் மற்றும் குற்றம் சாட்டிய பேராசிரியைகளின் பெயர்களை ரகசியமாக வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+