கேஜி காஸ்-அம்பானி சகோதரர்கள் புதிய ஒப்பந்தம்

இதனால், இயற்கை எரிவாயு பங்கீட்டில் சகோதரர்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு முற்றாகத் தீர்ந்துள்ளது.
கேஜி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை பங்கிட்டுக் கொள்வதில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் அனில் அம்பானியின் ஆர்என்ஆர்எல் நிறுவனங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஏற்கெனவே உள்ள குடும்ப ஒப்பந்தப்படி குறைந்த விலைக்கு எரிவாயு தரவேண்டும் என ஆர்என்ஆர்எல் கோரியது. ஆனால் அரசு நிர்ணயித்துள்ள புதிய விலைக்குத்தான் தரமுடியும் என்று கறாராகக் கூறியது ரிலையன்ஸ்.
இந்த விவகாரம், உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. சமீபத்தில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், "நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவுக்கு அரசுதான் உரிமையாளர். எரிவாயுவை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில், அரசு விதிமுறைப்படிதான் நடந்து கொள்ள வேண்டும். எரிவாயுவை பகிர்ந்து கொள்வதில், அம்பானி சகோதரர்களுக்கு இடையே ஏற்கனவே செய்து கொண்ட குடும்ப ஒப்பந்தம் செல்லாது. இது தொடர்பாக, இரு தரப்பும் கலந்து பேசி, 6 வாரங்களுக்குள் புதிய ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும்..." என்று கூறியது.
இதைத் தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் தங்கள் பகையை மறந்து சமாதானமடைந்தனர். பழைய குடும்ப ஒப்பந்தத்தை ரத்து செய்தனர்.
இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், அனில் அம்பானியின் ஆர்என்ஆர்எல், நிறுவனத்துக்கும் இடையே, மாற்றி அமைக்கப்பட்ட புதிய ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இதுகுறித்து, ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஒப்பந்தப்படி, உ.பி.யில் உள்ள தாத்ரி மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட தங்களின் நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை எரிவாயுவை கேஜி படுகையிலிருந்து பெற அனில் அம்பானியின் நிறுவனம் மத்திய அரசை அணுக முடியும்.
'விரைவில் எரிவாயுவுக்காக அரசை அணுகும் முயற்சிகளை ஆர் என் ஆர் எல் மேற்கொள்ளும்' என அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications