8 பேரின் கருணை மனு: ஜனாதிபதி ஏற்பு-தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் ஷியாம் மனோகர். இவரது சகோதரர் கொலை செய்யப்பட்டதால் அவரும், ஷியோராம், பிரகாஷ், ரவீந்தர், சுரேஷ், ஹரீஸ் ஆகிய 6 பேர் சேர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட 5 பேரை பழிக்குப் பழியாக கொலை செய்தனர்.
இதில் இந்த 6 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1997ம் ஆண்டு இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அதேபோல இதே மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திர குமார், நரேந்திர யாதவ் ஆகியோர், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரைக் கொலை செய்தனர்.
இதையடுத்து இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1999ம் ஆண்டு இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
தூக்கு தண்டனை பெற்ற இவர்கள் ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு கருணை மனு அனுப்பினர். அதில் தங்களது மரண தண்டனையை குறைக்குமாறு கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை பரிசீலித்த பிரதீபா பட்டீல் 8 பேரின் கருணை மனுக்களை ஏற்று, தூக்கு தண்டனையை ரத்து செய்தார். அதை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
தகவல் அறியும் சட்டத்தின்கீழ் இந்த விவரங்களை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக ஜனாதிபதியின் பரிசீலனைக்காக 77 கருணை மனுக்கள் வந்துள்ளன. இதில் 10 மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பரிசீலித்து ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம். 2009ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி தமிழ்நாட்டை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஜனாதிபதி ஆயுள் தண்டனையாகக் குறைத்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications