இனி யூனிகோட்' தான் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துரு!
கோவை: கணினிகளில் பயன்படுத்த தமிழ் யூனிகோட்' எழுத்துருதான் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துரு என்று அரசு அறிவித்துள்ளது.
கணினிகளில் தமிழில் டைப் செய்ய பல்வேறு எழுத்துக் குறியீடுகள் (பான்ட்கள்) பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் எழுதுவோருக்கும் அதை கணினியில் படிப்போருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைக் களைய உலகின் அனைத்து கணினி மொழிகளையும் ஒன்றிணைக்க யூனிகோட் என்ற எழுத்துரு உருவாக்கப்பட்டது. இதற்காக, ஒருங்குறி கூட்டமைப்பு (யூனிகோடு கன்சார்டியம்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதில், தமிழுக்கும் குறிப்பிட்ட அலைவரிசை ஒதுக்கப்பட்டு அதற்குள் இடம்பெறும் வகையில் அனைத்து தமி்ழ் எழுத்துக்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலகெங்கிலும் கணினிகள் ஒரே விதமான தமிழ் எழுத்துருவை டைப் செய்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த யூனிகோட்' எழுத்துருவை தமிழக அரசு பயன்படுத்துவது பற்றி ஆராய தமிழக அரசு மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழுவை அமைத்தது.
அதன் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த அந்த குழு, தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
இதன் அடிப்படையில் கோவையில் செம்மொழி மாநாடு தொடங்கிய நாளன்று, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் டேவிதார், ஒரு ஆணையை வெளியிட்டுள்ளார்.
அதில், இனி தமிழக அரசு, டிஏஎம் (டேம்), டிஏபி (டேப்) மற்றும் பிற பிரத்தியேக 8-பிட்' குறியீடுகளில் இருந்து 16 பிட் தமிழ் யூனிகோடுக்கு (ஒருங்குறி) மாற வேண்டும்.
16 பிட் தமிழ் யூனிகோட் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக் குறியீடாக இருக்கும்.
எந்த மென்பொருள்களில் எல்லாம் தமிழ் யூனிகோடு வேலை செய்யவில்லையோ அல்லது முழுதாக தெரியவில்லையோ, அந்த பயன்பாடுகளில் டிஏசிஆ-16 குறியீட்டை மட்டும் ஒரு மாற்றுக் குறியீடாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்காக, அனைத்து அலுவலகங்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அரசு செய்யும். தற்போது டிஜிட்டல் வடிவத்தில் உள்ள ஆவணங்களும் யூனிகோடு எழுத்துருவுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் இணைய கண்காட்சி:
மாநாட்டில் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை நிருபர்களிடம் பேசுகையில்,
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட தமிழ் இணைய கண்காட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழை எவ்வாறெல்லாம் இணையத்தில் பயன்படுத்த முடியும் என்பதை சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள இந்த கண்காட்சி பெரிதும் உதவியுள்ளது. எனவே இது போன்ற தமிழ் இணைய கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications