ஜெ. அறிவித்த போராட்டம்-ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ ஆதரவாளர்களுடன் புறக்கணிப்பு

தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயக்க வலியுறுத்தியும், மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சார வசதி, சாலை வசதி, குடும்ப அட்டை ஆகிய வற்றில் கவனம் செலுத்த வலியுறுத்தியும், அ.தி.மு.க. தூத்துக்குடி மாவட்டக் கழகத்தின் சார்பில், சனிக்கிழமை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார் ஜெயலலிதா.
அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் அங்கு கோஷ்டி மோதல் வெடித்தது.
ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. மோகன் மற்றும் விளாத்திக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் ஆகியோர் தங்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு வரவில்லை என்று சிறிது நேரம் ஒதுங்கியிருந்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து ஜெயலலிதாவிடம் புகார் கூறப்படும் என அவர்களுக்குச் சொல்லப்பட இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நிமிடத்திலேயே அவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வெளியேறிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு வெறும் 200 பேர் மட்டுமே மிஞ்சினர். போராட்டம் பி்சுபிசுத்துப் போனது.
ஜெயலலிதாவிடம் புகார் தரப்படும் என கூறியும் கூட அதைப் பொருட்படுத்தாமல் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ கிளம்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications