கே.பியை வடக்கு மாகாண முதல்வராக்க முயற்சிக்கிறது ராஜபக்சே அரசு-பொன்சேகா
கொழும்பு: வடக்கு மாகாணத்திற்கு கே.பி.யை முதல்வராக்க ராஜபக்சே அரசு முயற்சிப்பதாக கூறியுள்ளார் சரத் பொன்சேகா.
இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார் பொன்சேகா. அப்போது அவர் கூறுகையில்,
கே.பியை கைது செய்த விதம் பற்றி குறிப்பிட்டால், அரச பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றம் சுமத்துவார்கள் என்பதனால் அதனை கூற நான் விரும்பவில்லை.
ராணுவ வீரர்கள் சிறைக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், கே.பி.வடக்கில் சுற்றுலா செய்கின்றார்.
அவரது கணக்கில் பில்லியன் டாலர்கள் இருக்கின்றன. வடக்கில் மாவட்ட செயலாளர்களை அழைத்து அவர் கூட்டங்களை நடத்துகிறார். கே.பியை. வடமாகாணத்தின் முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
போரை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு உதவிய மக்களுக்கும் படையினருக்கும் இத்தருணத்திலும் நன்றி கூறிக் கொள்கின்றேன்.
தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால், எங்களது உறுதிமொழிகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றியிருப்போம். ஆனால் அரசாங்கம் உறுதிமொழியை மீறிவிட்டது. எஞ்சிய காலம் தொடர்பாக அரசாங்கம் சிந்திக்கவே இல்லை. நாட்டில் சட்டம் ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
பொருளாதார ரீதியில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தில் இருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிய ராணுவ முகாம்களை கொண்டு நடத்துவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது என்று பேசினார் பொன்சேகா.












Click it and Unblock the Notifications