இணையத்தளத்தில் ரயில் டிக்கெட் புக்கிங்: ஏஜெண்டுகளுக்கு கட்டுப்பாடு- ஏதாவது பயன் இருக்குமா?
சென்னை: ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையத் தளத்தில் காலை 8 மணி முதல் 9 மணி வரை தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில்வே டிக்கெட் ஏஜெண்டுகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய இந்தியன் உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையத் தளத்தில் (http://www.irctc.co.in/) புக்கிங் செய்யப்படுகிறது.
ஆனால், இதில் பெரும்பாலான டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி. ரயில் டிக்கெட் விற்பனை ஏஜெண்டுகளே முடக்கி விடுவதால் பொது மக்களுக்கு டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
குறிப்பாக தட்கல் டிக்கெட்டுகளை இவர்கள் பெருமளவில் மொத்தமாக வாங்கி, கூடுதல் விலை வைத்து விற்று வருகின்றனர்.
இதையடுத்து காலை 8 மணி முதல் 9 மணி வரை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் அதன் ஏஜெண்டுகள் டிக்கெட் எடுத்து விற்பதற்கு தடை விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதேபோலவே 90 நாட்களுக்கு முன் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாளிலும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையத்தளத்தில் காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை ஒருமணி நேரம் ஏஜெண்டுகளுக்கு டிக்கெட் முன்பதிவை தடை செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கவுண்ட்டர்களில் தங்களது ஆட்களை குவித்து டிக்கெட்டுகளை மொத்தமாக சுருட்டும் இந்த ஏஜெண்டுகளை தடுக்காத வரை, அவர்களுடன் கூட்டு சேர்ந்து தி்ல்லுமுல்லு செய்யும் சில ரயில்வே ஊழியர்களை கட்டுப்படுத்தாத வரை ரயில்வேயின் எந்த முயற்சியும் மக்களுக்கு பலனளிக்கப் போவதில்லை என்பதே உண்மை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications