5 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி!
ஸ்ரீஹரிகோட்டா: 5 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி-சி15 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் இந்தியாவின் தொலையுணர்வு செயற்கைக் கோளான கார்டோசாட்-2பி, அல்ஜீரியாவின் அல்சாட், கனடா, சுவிட்சர்லாந்தின் 2 நானோ செயற்கைக் கோள்கள், அந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தயாரித்த மிகச் சிறிய அளவிலான ஸ்டூட்சாட் ஆகிய செயற்கைக்கோளை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது.
மே 9ம் தேதியே இது விண்ணில் செலுத்தப்படவிருந்தது. ஆனால் அப்போது ராக்கெட்டின் 2வது நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் தள்ளி வைக்கப்பட்டு இன்று ஏவப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்எல்வி-டி3 ராக்கெட்டை இந்தியா செலுத்தியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.அதன் பின்னர் இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ள கார்டோசாட்-2பி செயற்கைக் கோளின் எடை 694 கிலோவாகும்.
நகர்ப்புறத் திட்டமிடல், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளுக்கான ஆய்வு தொடர்பாக இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. மேலும், நெடுஞ்சாலைகளைத் திட்டமிடும் பணி, ரிங் ரோடுகள் அமைக்கும் பணி ஆகியவற்றை திட்டமிடவும் இந்த செயற்கைக் கோள் உதவும்.
முன்னதாக ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்படுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் ராதாகிருஷ்ணன், நேற்று திருப்பதியி்ல் சுவாமி தரிசனம் செய்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications