கடையநல்லூரில் கந்துவட்டி கும்பல் அட்டகாசம்: குடும்ப பெண்ணை மிரட்டி ஆபாச படம்
கடையநல்லூர்: கடையநல்லூரில் கந்து வட்டி பிரச்சனையில் பெண்ணை ஆபாச படம் எடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர் அட்டைக்குளம் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் முகமது மைதீன். இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். இவருக்கு சமீப காலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இவர் பலரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கினார்.
இவரது நண்பர்களான ஆரிபுல்லா, அசன் இப்ராகீம், மைதீன் ஆகிய 3 பேரும் இவருக்கு கடன் கொடுத்து மாதம் மாதம் வட்டி பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் முகமது மைதீ்ன் அடிக்கடி வெளியூர் சென்று வந்ததால் நண்பர்கள் 3 பேரும் அவரது வீட்டிற்கு தினமும் வட்டி வாங்க சென்றுள்ளனர்.
இதில் முகமது மைதீனின் மனைவி அசன் பாத்திமாவுக்கும், இவர்கள் 3 பேருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதனால் இவர்கள் அடிக்கடி மைதீன் வீட்டிற்கு சென்று வந்தனர். பின்னர் அசன் பாத்திமாவை இவர்கள் 3 பேரும் பல ஊர்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் தங்களுடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் எடு்த்து நெருங்கிய நண்பர்களிடம் காட்டியுள்ளனர். நாளடைவில் கந்து வட்டிக்கு ஈடாக அசன் பாத்திமாவை மிரட்டி ஆபாச படம் எடுத்து செல்போனில் எஸ்.எம்.எஸ்சில் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 3 பேரில் ஒருவர் மைதீன் வீ்ட்டிற்கு நள்ளிரவில் சென்றபோது அக்கம்பக்கத்தினர் பிடித்து நையபுடைத்தனர். இதற்கிடையே இதுகுறித்து அசன் பாத்திமாவின் கணவர் முகமது மைதீன் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில் கந்து வட்டி காரணமாக தான் இல்லாத போது 3 பேர் தனது மனைவியை மிரட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆசை தம்பி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications