ஜெகன்மோகன் ரெட்டி யாத்திரையில் பங்கேற்ற காங். செயலாளர் நீக்கம்
ராஜமுந்திரி: கட்சி மேலிடக் கட்டுப்பாட்டை மீறி ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டுள்ள ஆறுதல் கூறும் யாத்திரையில் பங்கேற்ற ராஜசேகர ரெட்டிக்கு நெருக்கமானவரும், ஆந்திர மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அம்பாடி ராம்பாபு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரெட்டி கூறுகையில், எனது தந்தை நடத்திய மிகப் பெரிய பாதயாத்திரையின்போது 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு எனது தந்தையுடன் இணைந்து நடந்தவர் ராம்பாபு. அவர் போன்ற உண்மையான உழைப்பாளிகளால்தான் காங்கிரஸ் கட்சியால் 2 முறை ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
அப்படிப்பட்ட ராம்பாபுவை நீக்கியிருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. இது என்னை மிகவும் பாதித்துள்ளது. இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. என்ன நடக்கிறது என்பதை அனைவரும் அறிவர்.
ராம்பாபு நீக்கத்தை ரத்து செய்ய என்னால் என்ன முடியுமோ அதைச் செய்வேன் என்றார் ரெட்டி.
கடந்த ஒரு வாரமாக யாத்திரையை தொடர்ந்து வருகிறார் ரெட்டி என்பது நினைவிருக்கலாம். ஆனால் அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகிறது. இந்த நிலையில் தற்போது ரெட்டியின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதால் ஆந்திர மாநில காங்கிரஸ் வட்டாரம் மேலும் கலகலக்கத் தொடங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications