விபத்திலிருந்து தப்பிய கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்
ஜலந்தர்: ஜம்முவில் இருந்து கன்னியாகுமரி வந்து கொண்டிருந்த ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் பஞ்சாப் அருகே விபத்தில் சிக்குவது அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து கன்னியாகுமரி வரும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் பஞ்சாப் மாநிலம் லெஹ்ரகாகா ரயில் நிலையம் அருகே வந்தபோது ஒரு பயணி அபாய சங்கிலியை இழுத்தார்.
இதையடுத்து அவசர பிரேக் போடப்பட்டு ரயிலை நிறுத்த டிரைவர் முயற்சித்தார். அப்போது ரயில் 100 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அவசர பிரேக் போடப்பட்டதால் என்ஜினுக்கு 2 பெட்டிகளுக்கு அடுத்து இருந்த பெட்டியின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் என்ஜினும், 2 பெட்டிகளும் மட்டும் தனியே சென்றுவிட்டன.
ஆனாலும் அதிர்ஷ்டவசமாக ரயில் பெட்டிகள் ஏதும் கவிழவில்லை. இதனால் விபத்தில் இருந்து இந்த ரயில் தப்பியுள்ளது.
இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்து பகுதி-ஹெலிகாப்டர்களை பயன்படுத்த ப.சி யோசனை:
இந் நிலையில் மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் சென்றடைய பெரும் தாமதம் ஏற்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்களின்போது ஹெலிகாப்டர்களையோ, சிறிய ரக விமானங்களையோ மீட்புப் படைகள் பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ரயில் விபத்து நடந்து சுமார் 3 மணி நேரம் கழித்தே முதல் நிவாரணக் குழு அங்கு சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது குழு 7 மணி நேரம் கழித்தே வந்து சேர்ந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications