கோவை-எமனுக்கு கடிதம் எழுதிவிட்டு பெயிண்டர் தற்கொலை
கோவை: கோவை கடலைக்கார சந்தைச் சேர்ந்த பெயிண்டர் சேகர். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். சில மாதங்களுக்கு முன், இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இதனால் கடந்த 6 மாத காலமாக தனிமையில் இருந்த சேகர் மன உளைச்சலால், பாதிக்கப்பட்டார்.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு கோவை நீதிமன்ற வளாகத்துக்குள் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரேஸ் கோர்ஸ் காவல்நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றினர். சேகரின் பையில் ஒரு கடிதம் இருந்தது.
சேகர் எழுதியிருந்த அந்தக் கடிதத்தில், ''அனுப்புனர்-சேகர், த/பெ. ராமசாமி, பெறுனர்-எமதர்மராஜா, த/பெ எமன் அப்பா, எம தருமன் வீதி, எமனின் செல்: 000321000, மேல் உலகம். சித்திரகுப்தன் செல் நம்பர்: 944561377.
என்னை பற்றிய மேலும் விபரங்கள் அறிய மேலே எழுதப்பட்டிருக்கும் செல் நம்பர்களை தொடர்பு கொள்ளவும்'' என்று எழுதப்பட்டிருந்தது.
மன உளைச்சலால் இவ்வாறு எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்ததாகத் தெரிகிறது.
அதிகாரிகள் மீது புகார் கூறி கடவுளிடம் மனு:
இதற்கிடையே
விழுப்புரம் மாவட்டம் திருவினைநல்லூர் கிராமத்தில் கிருபாபுரிஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான குளம் பராமரிப்படாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு, கடந்த 2009ம் ஆண்டு குளத்தை சுத்தப்படுத்தி சுற்று சுவர் கட்ட ரூ.7.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியிலிருந்து இரண்டு முறை சுற்று சுவர் கட்டப்பட்டும் அது தரமற்றதாக இருந்ததால் இடிந்து விழுந்து விட்டது. இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் இன்று கண்டன பேரணி நடந்தது.
200 பேர் கலந்து கொண்ட இந்த பேரணி முடிந்ததும், கிருபாபுரிஸ்வரர் கோவிலில் உள்ள சிலை முன் கோவிலை சுவரை தரமானதாக மீண்டும் அதிகாரிகள் கட்ட வேண்டும் என்றும், கடவுள் கண் திறந்து ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கோவிலில் மனு வைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications