For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு

By Chakra
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா என்று மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

முதல்வர் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசியதற்கு பொன்முடி இவ்வாறு பதில் தந்துள்ளார்.

தஞ்சை திலகர் திடலில் நேற்றிரவு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி கூறியதாவது:

இந்த நிகழ்ச்சியிலே கலைஞர் அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லிவிட்டு செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் இன்று மாலை ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

வாய்தா வாங்கும ஜெயலலிதாவுக்கு எதிராக துணை முதல்வர் ஸ்டாலின், 4ஆம் தேதி நடக்க இருக்கும் இளைஞரணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுத்திருக்கிறார். இதை அறிவித்தவுடனேயே, அலறிக்கொண்டு ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார் ஜெயலலிதா.

அறிக்கை விடுவதையே தொழிலாகக் கொண்டுள்ள ஜெயலலிதா, அரசியல்ரீதியாக இந்தக் கழகத்தைப் பற்றியோ, முதல்வரைப் பற்றியோ ஸ்டாலின் பற்றியோ விமர்சனம் செய்தால் அதற்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரின் குடும்பத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். எனக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்று பழக்கப்பட்டிருந்தாலும் கூட, அண்ணன் 'வெற்றிகொண்டான் பாணியில்' பதில் சொன்னால்தான் ஜெயலலிதாவுக்கு புரியும்.

'வெற்றிக்கொண்டான் பானியில்' சொல்ல வேண்டும் என்றால், பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா, தனக்கு எப்போதும் ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பவர்களை ஆட்டிப்படைத்து, அரசியல் செய்து கொண்டிக்கும் ஜெயலலிதா, இன்று நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை என்றவுடன், நமக்கு என்ன கதி என்று கதிகலங்கியிருக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் அரிசி போட வக்குண்டா, வழியுண்டா?. இப்போகு அங்கு இருக்கின்ற இதே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் சொன்னார்களே ஜெயலலிதா ஆட்சியிலே எலி கறி திண்றார்கள் என்று. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா, முதல்வரைப் பார்த்து ஏகவசனத்தில் விமர்சனம் செய்யுகிற ஜெயலலிதாவே, நாவை அடக்கி வை என்று எச்சரிக்கிறோம்.

வருகிறது தீர்ப்பு.. காத்திருக்கிறது பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு. அதற்காகக் காத்திருக்கிறோம். ஜெயலலிதாவே முறையாக அறிக்கை விடு, பதில் சொல்கிறோம். வழக்குகளை நேர்மையாக சந்திகக திராணியில்லாத ஜெயலலிதாவே நாவை அடக்கு என்றார் பொன்முடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X