அதிமுக முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் மரணம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ். பன்னீர்செல்வம் மரணமடைந்தார்.

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 1991-1996ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் எஸ்.எஸ்.பன்னீர் செல்வம். பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் சேர்ந்த அவர், விழுப்புரம் நகர மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் திமுகவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென காலமானார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+