திமுக கூட்டணியை காங். தலைவர்கள் விமர்சிக்கக் கூடாது-தங்கபாலு
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியினர் திமுக கூட்டணியை விமர்சித்துப் பொது இடங்களில் பேசக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்கபாலுவைத் தவிர தமிழக காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் பலரும் திமுக கூட்டணியை பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் விமர்சித்தபடி உள்ளனர். அதிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் போன்றோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நேற்று கூட இளங்கோவன் இதுகுறித்து பேசினார். சத்தியமூர்த்தி பவனில் நடந்த செல்வப் பெருந்தகை காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சியின்போது அவர் பேசுகையில், தொண்டர்களின் மனதை இங்கு மூத்த தலைவர்கள் பார்த்துள்ளனர். இந்த மனதுக்கேற்ற கூட்டணியைக் கொண்டு வர வேண்டும் என கட்சித் தலைமைக்கு அவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார் இளங்கோவன்.
இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியை வெளிப்படையாக இளங்கோவன் விமர்சித்து வருகிறாரே. அதிமுகவுடன் கூட்டணி வருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போது திமுகவுடன் கூட்டணி சுமூகமாகவே உள்ளது. இது மேலிடம் ஏற்படுத்திய கூட்டணி. இதை குலைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி என்பது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எடுத்த முடிவு. இதில் எந்த மாற்றமுமில்லை. அவரது கட்டளையை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழக காங்கிரசுக்கு உண்டு.
கூட்டணி பற்றி சோனியா காந்தி சார்பில் தமிழகத்தில் நான் மட்டுமே பேச முடியும். வேறு யாரும் பேச முடியாது. பேசக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். உள் அரங்குகளில், செயற்குழு, பொதுக் குழு கூட்டங்களில் தான் தங்கள் கருத்துக்களை பேச வேண்டும். அதை பொது மேடைகளில் பேசக் கூடாது என்றார்.
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications