தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்
தென்காசி: தமிழம் முழுவதும் இன்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் நடத்துகிறது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பெருந்திரள் முறையீடு குறித்த விளக்க உரைக் கூட்டம் தென்காசி அருகேயுள்ள மேலகரம் அரசு பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் கலந்து கொண்டு இன்று நடைபெறும் பெருந்திரள் முறையீடு குறித்து விளக்கவுரை ஆற்றினார். இதில் தென்காசி கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் அவர் நிருபர்களிடம் தெரிவிக்கையில், மத்திய அரசு போல் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட ஒரு நபர் குழு அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகத்தில் உள்ள 400 தொடக்கக் கல்வி அலுவலகங்களின் முன்பு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications