அமீத் ஷாவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: சோராபுதீன் வழக்கில் முக்கியக் குற்றவாளியான அமீத் ஷாவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில், அமீத் ஷாவுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது. அவரிடம் நிறைய விசாரிக்க வேண்டியுள்ளது. அவரிடமிருந்து நிறைய ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. இவை முன்பு சோரபுதீனிடம் இருந்தவையாகும். இவை வழக்கில் முக்கிய ஆதாரங்களாகும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அமீத் ஷா சார்பில் ராம் ஜெட்மலானியும், அவரது மகன்களும் ஆஜராகின்றனர். சிபிஐ சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி ஆஜராகிறார்.
இந்த துளசி ஏற்கனவே குஜராத் மாநில அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications