வருமான வரி கணக்கு சமர்ப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய காலக் கெடுவை நீட்டித்துள்ளது மத்திய வருவாய் வரி வாரியம்.
இதன்படி ஜூலை 31யிலிருந்து ஆகஸ்ட் 4-ம் வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை விடுத்து அறிக்கையில், "வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமானம், முதலீடு தொடர்பான அனைத்து கணக்குகளையும் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி புதன் கிழமை மாலைக்குள் அந்தந்த வருமான வரி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இணையதளம் மூலம் இ-ஃபைலிங் செய்வோர் சில தொழில்நுட்ப பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக புகார்கள் எழுந்ததாலும், வரிமான வரு கணக்கு சமர்ப்பிக்க இறுதி நாளில் ஏராளமான கூட்டம் முண்டியடித்ததாலும் இந்த காலக்கெடு நீட்டிப்பு முடிவை மேற்கொண்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications