சேலத்தில் ஜாமீனில் வெளிவந்த கைதி வெட்டிக் கொலை:போலீஸ் வலைவீச்சு
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரில் ஜாமீனில் வெளிவந்த கைதி வெட்டிக் கொல்லப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ரவுடி சசி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி மோகன்ராஜ் என்பவரை கடந்த 3 மாதங்களுக்கு முன் வெட்டிக் கொன்றார். இந்த வழக்கில் போலீசார் சசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் அன்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார்.
தான் ஜாமீனில் வந்த செய்தி மோகன்ராஜ் கூட்டத்திற்கு தெரிந்து விட்டால் தன்னை கொன்று விடுவார்கள் என்று சசி பயந்தார். அதனால் யாருக்கும் தெரியாமல் மேட்டூர் நங்கவல்லியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
சசி வெளியில் வந்த செய்தியை எப்படியோ அறிந்து கொண்டது எதிரிக்கும்பல். இதை அறியாத சசி இன்று காலை சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு காரில் தப்பிச் சென்றது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications