இளைஞர் காங். புதிய நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி பயிற்சி
டெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி நேரடியாக பயிற்சி அளிக்கிறார்.
இளைஞர்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ள ராகுல் காந்தி இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரசை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அனைத்து மாநிலங்களிலும் இளைஞர் காங்கிரசுக்கு நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு, குஜராத், திரிபுரா, பஞ்சாப், அரியானா, சத்தீஸ்கர், பாண்டிச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இவர்களுக்கு ராகுல் காந்தி சிறப்பு பயிற்சி அளிக்கிறார்.
இந்த பயிற்சி முகாம் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் இன்று தொடங்கியது. இதில் 9 மாநிலங்களைச் சேர்ந்த புதிய மாநில நிர்வாகிகள் 90 பேர் கலந்துகொண்டனர்.
தமிழ் நாட்டில் இருந்து மாநில தலைவர் யுவராஜா, துணை தலைவர் வரதராஜன், பொதுச் செயலாளர் பிரபு, மகேந்திரன், மோகனம்மாள், காயத்ரி உள்பட 10 பேர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications