மமதாவின் நக்சல் ஆதரவு பேச்சு-நாடாளுமன்றத்தில் அமளி, ஒத்திவைப்பு
டெல்லி: மேற்கு வங்க மாநிலம் லால்கரில் பேசிய திரினமூல் காங்கிரஸ் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான மமதா பானர்ஜி நக்சலைட்களுக்கு ஆதரவாக பேசியது இன்று நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது.
மேற்கு வங்கத்தில், நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள லால்கரில், பயங்கரவாதத்துக்கு எதிரான களம் என்ற தலைப்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவோயிஸ்ட் நக்சலைட்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் பொதுமக்களையும் பெருமளவில் வந்து கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதையடுத்து மமதாவுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்கு வங்க மாநிலஅரசும் கோரியிருந்தன.
இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி, நக்சல் தலைவரான ஆசாத் என்பவர் என்கவுன்டரில் கொல்லப்படவில்லை. மாறாக, வேண்டும் என்றே அவரைக் கொலை செய்து விட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அப்பாவி மக்களையே கொல்கின்றனர். பாதுகாப்புப் படையினரின் உடைகளில் சென்று கொன்று குவிக்கின்றனர் என்று முழுக்க முழுக்க நக்சலைட் ஆதரவாளர் போல பேசினார்.
இந்தப் பேச்சு இன்று நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. மமதா பானர்ஜி லால்கரில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக நடத்திய பேரணி குறித்து கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என பாஜகவினர் இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதனால் அவையில் கேள்வி நேரம் பாதிக்கப்பட்டது. அமளியாக இருந்தது. ராஜ்யசபாவிலும் இது எதிரொலித்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
விவாதம் கேட்கும் பாஜக
இதற்கிடையே, மமதாவின் பேச்சு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என பாஜக கூறியுள்ளது.
இரு அவைகளிலும் கேள்விநேரத்தை ரத்து செய்துவிட்டு இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என அக்கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.
மாவோயிஸ்ட் தலைவர் ஆஸாத் கொல்லப்பட்டது தனக்கு துயரமாக இருந்தது என்று மத்திய அமைச்சர் ஒருவர் எப்படிப் பேசலாம் என்று பாஜக கேட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications