ஆக. 30ல் கோட்டையை முற்றுகையிட சத்துணவு ஊழியர்கள் முடிவு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஆகஸ்ட் 30 ம் தேதி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போதவதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 30 ம் தேதி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள கோட்டையை முற்றுகையிடுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் டி. ஆர்.மேகநாதன் பேசுகையில்,

சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழு நேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்க வேண்டும்.

மாதாந்திர ஓய்வு ஊதியம் வழங்கவேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு தயாரிப்பு செலவின தொகையை ரூ 2 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசுத் துறை காலிப் பணியிடங்களில் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி வழங்கவேண்டும் .

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 30 ம் தேதி ஒரு லட்சம் சத்துணவு ஊழியர்கள் சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், 7 மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.தங்கவேல், ஆர். மனோகரன், எஸ்.காமராஜ், எ.வேம்புச்சாமி, எஸ்.முத்துமாணிக்கம், ஆர்.கமலநாதன்,

மாவட்ட செயலாளர்கள் பி.பாலகிருஷ்ணன், துரை. அரங்கசாமி, ஆர்.அறிவழகன், ச. மதிவாணன், அ.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கு.சக்தி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+