கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்-குவியும் விண்ணப்பங்கள்
சென்னை: கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் கலந்து கொள்ள இன்றைக்குள் விண்ணப்பங்களைக் கொடுக்க வேண்டும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் பணியில் காலியாக உள்ள 1,576 இடங்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான பின்னடைவு காலியிடங்கள் 1,077க்கு கடந்த மாதம் 21ல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் தேதி கடைசி நாள் ஆகும். அதாவது இன்றுதான் கடைசி நாள். இதையடுத்து அதிக அளவிலானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர். தேர்வுக்கு இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
நெல்லையில் குவிந்த 60 ஆயிரம் விண்ணப்பங்கள்:
விஏஓ தேர்வுக்கு நெல்லை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நெல்லை தபால் அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
நெல்லை மாவட்டம் உள்பட பல தபால் நிலையங்களில் விண்ணப்பத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதுகுறித்து நெல்லை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சரவணன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் 60 ஆயிரம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடைசி நேரத்தில் விண்ணப்பம் அனுப்புபவர்களின் வசதிக்காக சிறப்பு கவுண்டர்கள் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது என்றார். நேற்று மாலை நெல்லை சந்திப்பு தபால் நிலையத்தில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications