மாற்றுத்திறனாளிகளை தரதரவென இழுத்து முரட்டுத்தனமாக நடந்த போலீஸ்!
சென்னை: நிரந்தர அரசு வேலை கோரி போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை போலீஸார் தரதரவென இழுத்தும், அவர்களுக்கு கால்களாகவும், கைகளாகவும் விளங்கும் ஊன்றுகோல்களை கீழே இழுத்துப் போட்டும் மனிதாபிமானமற்ற முறையில் போலீஸார் நடந்து கொண்டது பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விளையாட்டுத்துறையை சேர்ந்த மாற்று திறனாளி மாணவர்கள் தங்களுக்கு நிரந்தர அரசு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹால் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பியப்படி இருந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவர்களை அங்கிருந்து போகுமாறு போலீஸார் கூறியும், தங்களுக்கு கோரிக்கைகளுக்கு இதுவரை எந்தவித பலனும் இல்லாததால் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என கூறினர்.
இதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தரதரவென போலீஸார் இழுத்துச் சென்று சாலையோரம் போட்டனர். அவர்கள் வைத்திருந்த ஊன்றுகோல்களை தூக்கி எறிந்தனர். அவர்கள் வைத்திருந்த பேனர்களை வாங்கி கிழித்துப் போட்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதி வழியாக வந்த திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழிக்கு இதுகுறித்து தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவர் விரைந்து வந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினார். பின்னர் அவர்களது கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட அவர், உண்ணாவிரதத்தையும், சாலை மறியலையும் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். முதல்வரிடம் தானே நேரில் சென்று இதுகுறித்துப் பேசி முடிந்தவரை நிறைவேற்றித் தர முயற்சிப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர். பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தானே பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.
பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்று திறனாளிகள் தங்களுக்கு நிரந்தர அரசு வேலை வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து இருக்கிறார்கள். நான் அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிப்பதாக உறுதி கொடுத்து இருக்கிறேன்.
முதல்வர் கருணாநிதி அவர்களின் கோரிக்கைகளை பார்த்து விட்டு அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக செய்வார்கள். அதற்கு எவ்வளவு நாள் ஆகும் என்று சொல்ல முடியாது. பொதுவாக எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது. இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நான் தெளிவாக சொல்லியிருக்கிறேன். கோரிக்கைகளில் எதை நிறைவேற்ற முடியுமோ அந்த கோரிக்கைகளை நியாயமாக, நிச்சயமாக நிறைவேற்றி தருவார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் தான் மாற்று திறனாளிகளுக்கு உரிய இடம் வழங்குவதிலும், நியாயமானதை செய்வதிலும் முதலிடம் வகிக்கிறது. இந்த துறையை முதல்வர் கருணாநிதியே கையில் எடுத்துக்கொண்டு உள்ளார். அதனால் அவர்கள் என்ன கேட்டு இருக்கிறார்களோ அதை நிச்சயமாக அதை அவர் நிறைவேற்றி தருவார் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications