திமுக-காங். கூட்டணி வலுவாகவே உள்ளது-இளங்கோவன் தடாலடி பல்டி

திமுக மீது தொடர்ந்து சரமாரியாக பாய்ந்து வந்த இளங்கோவனை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் வாய்ப்பூட்டு போட்டது - குலாம் நபி ஆசாத் மூலமாக.
இதையடுத்து இளங்கோவன் அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி.எஸ்.விஜயகுமாரின் மகளின் திருமணத்திற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்தனர். அவர்களிடம் இளங்கோவன் பேசுகையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. கூட்டணி பற்றி கருத்து தெரிவிப்பது என்றால், நாங்கள் குலாம் நபி ஆசாத்திடம் தெரிவிப்போம். அவர், அதை தலைமையிடம் தெரிவிப்பார். இதுவே எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்று மொட்டையாக சொல்லி நிறுத்திக் கொண்டார்.
அதேசமயம், தனது டச்சையும் இளங்கோவன் விடவில்லை. அவர் கூறுகையில், மத்திய அரசின் திட்டங்கள் எவை எவை என்பது மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை. அதனால் ஒன்றாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை காங்கிரஸில் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு விளக்கப் போகிறார்கள்.
மத்திய அரசு செயல்படுத்தும் 100நாள் வேலை திட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு நாள் கூலியாக 100 வழங்குகிறது. ஆனால் தமிழகத்தில் பல ஊராட்சி மன்றத்தலைவர்கள் 60 ரூபாய் 80ரூபாய் தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இதனை முதல்வர் கருணாநிதி அரசு தடுக்க வேண்டும். உண்மையான கூலியை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவை லேசாக இடித்துக் கருத்துக் கூறி நிறுத்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications