தென்காசி மாணவர் தற்கொலை: கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்கள் புகார்
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அக்கல்லூரி முன் மாணவர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் காலேஜ் இயங்கி வருகிறது. அதில் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சிதம்பரசேட் என்பவரின் மகன் அரவிந்த் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
சுமாராக படிக்கும் அரவிந்தை கடந்த வெள்ளிக்கிழமை அன்று துறைத் தலைவர் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் 2 நாளாக கல்லூரிக்குச் செல்லாத அரவிந்த் நேற்று இரவு தூங்கும் போது விஷம் குடித்து விட்டு தூங்கி விட்டார். மறுநாள் காலை வெகு நேரமாகியும் எழுந்திராத அவர் இறந்ததை அறிந்த கல்லூரி மாணவர்கள் பெரும் திரளாக கல்லூரி முன்பு கூடிவிட்டனர்.
தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துவிட்டது என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், அவர்கள் தாங்களு்ம் கல்லூரி ஆசிரியர்களால் நிறைய துன்பங்கள் அனுபவிப்பதாகவும், அடக்கு முறையை கல்லூரி நிர்வாகம் கைவிடாவிட்டால் அரவிந்த் எடுத்த முடிவை தான் மற்ற மாணவர்களும் எடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.
ஆனால் அரவிந்தின் பெற்றோரும், கல்லூரி நிர்வாகமும் அரவிந்த் உடல் நல உலைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications