பொன்னமராவதியில் திமுக-அதிமுக மோதலால் பதட்டம்
புதுக்கோட்டை: பொன்னமராவதியில் திமுக மற்றும் அதிமுகவினர் திடீரென மோதிக் கொண்ட சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதி திமுக ஒன்றிய செயலாளராகவும், ஒன்றிய சேர்மனாகவும் இருப்பவர் ராசு. இவருக்கும் அப்பகுதியில் உள்ள மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்ந்து சொற்போர் நடந்து வந்துள்ளது. பொன்னமராவதியில் திமுக அரசின் சாதனையை பாராட்டும் வகையில் பொதுக் கூட்டம் ஒன்றுக்கு ராசு ஏற்பாடு செய்து நடத்தினார்.
எரியும் கொல்லியில் எண்ணெய் ஊற்றினால் போல் அந்த கூட்டத்தில் ராசு பிற கட்சியினரை மரியாதையின்றி உதாசீனமாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் திமுக பானியில் அதே இடத்தில் ஒரு கூட்டத்தை நடத்தி திமுகவினரைச் சாடியுள்ளனர்.
இந்த தகவல் ராசுவின் காதுகளை எட்டியதும் அவர் ஆதரவாளர்கள் கடை வீதியில் நின்று கொண்டிருந்த அதிமுகவைச் சேர்ந்த அன்புவை தாக்கி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அன்புவை மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அந்த பகுதியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்த தாக்குதலால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்!












Click it and Unblock the Notifications