நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்-சிறப்பாக செயல்பட்ட தமிழக எம்.பிக்கள்

மழைக் காலக் கூட்டத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட எம்.பிக்கள் வரிசையில் தமிழக எம்.பிக்கள் 2வது இடத்தில் உள்ளனர். முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிர எம்.பிக்கள் ஆவர்.
டெல்லியைச் சேர்ந்த பிஆர்எஸ் லெஜிஸ்லேட்டிவ் ரிசர்ச் என்ற அமைப்பு இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 31 எம்.பிக்களுக்கு 32.70 புள்ளிகள் கிடைத்துள்ளன. முதலிடம் பிடித்துள்ள மகாராஷ்டிர எம்.பிக்களுக்குக் கிடைத்துள்ள புள்ளிகள் 32.80 ஆகும்.
கேள்விகள் கேட்டது, விவாதங்களில் கலந்து கொண்டது, தனி நபர் மசோதாக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
முதல் இரு இடங்களில் காங். :
தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பிதான் தமிழக எம்.பிக்களிலேயே சிறப்பாக செயல்பட்டவர் ஆவார். இவர் முதல் முறையாக எம்.பி. பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமசுப்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், நெல்லை தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ராமசுப்பு மொத்தம் 76 கேள்விகளைக் கேட்டுள்ளார். 12 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். மழைக் காலக் கூட்டத் தொடரில் 88 சதவீத வருகைப் பதிவையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து ராமசுப்பு கூறுகையில், விவசாயம், மின்சாரப் பற்றாக்குறை, கொள்முதல் விலை, கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டம் ஆகியவை குறித்தே நான் அதிக கேள்விகளைக் கேட்டுள்ளேன் என்றார்.
2வது இடத்தைப் பிடித்திருப்பவர் காஞ்சிபுரம் எம்.பி. பி.விஸ்வநாதன். இவர் 74 கேள்விகளைக் கேட்டுள்ளார், ஒரு விவாதத்தில் கலந்து கொண்டார், 62 சதவீத வருகைப் பதிவு இவரிடம் உள்ளது. இவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரே.
3வது இடத்தில் திமுக:
3வது, 4வது இடம்தான் திமுவுக்குக் கிடைத்துள்ளது. திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி சுகவனம் (72 கேள்விகள், 2 விவாதங்கள்) 3வது இடத்திலும், தர்மபுரி தாமரைச்செல்வன் (55 கேள்விகள், 7 விவாதங்கள்) நான்காவது இடத்திலும் உள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன், அதிமுகவின் முருகேச ஆனந்தன், காங்கிரஸின் மாணிக்க தாகூர் ஆகியோர் அனைத்து நாட்களிலும் அவைக்கு வந்திருந்தனர்.
டி.ஆர்.பாலு கடைசி இடம்:
திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, தனபால் வேணுகோபால், அதிமுகவைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன், பி.வேணுகோபால் ஆகியோர் ஒரு கேள்வியும் கேட்கவில்லை, எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை. இந்தப் பட்டியலில் இவர்களுக்குத்தான் கடைசி இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications