பாளை சிறைக்குள் கைதி அடித்து கொலை-பிரேத பரிசோதனையில் அம்பலம்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
பாளை மத்திய சிறையி்ல் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த கைதி ஒருவரின் செல் காணாமல் போனது தொடர்பாக இரு தரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வல்லநாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை சில கைதிகள் தாக்கியதில் அவர் இறந்தார்.
இது குறித்து சிறைத் துறை அதிகாரி கூறும்போது சுப்பிரமணியன் இருதய நோயால் இறந்தார் என்று கூறினார்.
ஆனால் சுப்பிரமணியன் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவர் பேரவை அமைப்பின் தலைவர் மணி தலைமையில் அவரது உறவினர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
இந்நிலையில் நெல்லை நீதிபதி ராஜேந்திர கண்ணன் நேற்று முன்தினம் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நடந்தது.
மேலும் சிறைத்துறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜ் நேற்று முன்தினம் மாலை பாளையங்கோட்டைச் சிறைக்கு வந்து விசாரணை நடத்தினார். நேற்றும் விசாரணை தொடர்ந்தது.
இதற்கிடையில் சுப்பிரமணியன் உடல் நெல்லை அரசு மருத்துவமனையி்ல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது மார்பு, இடுப்பு, மர்ம உறுப்பு ஆகிய பகுதிகளில் காயம் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.
இதையடுத்து அவரை தாக்கிய கைதிகள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications