பன்றிக் காய்ச்சல்-புதுவையில் கர்ப்பிணி, வேலூரில் சிறுமி பலி
வேலூர்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. வேலூர் அருகே பள்ளிச் சிறுமி பன்றிக் காய்ச்சல் தாக்கி உயிரிழந்தாள்.
வேலூர் அரசமரப்பேட்டையைச் சேர்ந்தவர் அக்ஷயஸ்ரீ (4). இவள் பிஷப் டேவிட் நகரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். சில நாட்களுக்கு முன் மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று உயிரிழந்தாள்.
இதையடுத்து அக்ஷ்யஸ்ரீ படித்து வந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அங்கு படித்து வரும் மாணவ, மாணவியருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
புதுவையில் கர்ப்பிணி சாவு:
இந் நிலையில் புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி இறந்தார்.
முதலியார்பேட்டையைச் சேர்ந்த சுஜாதா (33) பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
உயர் சிகிச்சைக்காக மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications