அண்ணா பெயரைச் சொல்லி பலரும் ஏமாற்றுகிறார்கள்-அழகிரி
மதுரை: அண்ணா பெயரைச் சொல்லவே தகுதி இல்லாத பலர், அவரது பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர் காரா.முருகேசன் இல்ல திருமண விழா மதுரையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அழகிரி பேசுகையில்,
அண்ணா காலத்தில் இருந்தே காரா. முருகேசன் திமுகவில் உள்ளார். காரா. முருகேசனுக்கு தெரியும் அண்ணா பெயரை யார் பயன்படுத்த வேண்டும் என்று. அண்ணா பெயரைச் சொல்ல திமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது. ஆனால் இப்போது யார் யாரோ அண்ணா பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அண்ணா ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி திமுகதான். அண்ணா வழங்கிய சின்னம்தான் உதயசூரியன். அண்ணாவுக்குப் பின்னர் திமுகவை உரிய முறையில், கலைஞர் வழிநடத்தி செல்கிறார். கலைஞர் ஆட்சியில் நாம் பணிபுரிய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அண்ணா பெயரை பயன்படுத்தி இன்று பலர் போலி அரசியல் நடத்துகின்றனர். அவர்கள் யார் என்று மக்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களுக்கு மக்கள் உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார் அழகிரி.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications