20,000 ஈழத் தமிழர்கள் கடத்தல்: இலங்கை தமிழ் எம்.பி அதிர்ச்சித் தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: இலங்கத் தமிழர்கள் 20,000 பேர் கடத்தப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவலை இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் தெரிவித்தார்.

கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் விடுதலைப் பபலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் ஏராளமான தமிழர்கள் இறந்தனர். இறுதியாக நடந்த போரில் உயிர் இழந்த தமிழர்களின் எண்ணிக்கை 50,000 ஆகும்.

இது தவிர 20,000 தமிழர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அத்தனை பேரும் கடத்தப்பட்டனர். தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவது அதிக அளவில் நடந்து வருகிறது. இதைத் தடுக்க இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் ராஜபக்சேவின் தாளத்திற்கு ஆடுபவர்களாக இருக்கின்றனர். போர் முடிந்து விட்ட நிலையில் 20,000 தமிழர்கள் மாயமாகி உள்ளனர். இவர்களின் கதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை.

இந்த பிரச்சனை மட்டுமின்றி ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்கும் சேர்த்து தீர்வு காண இந்திய அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+