இந்தியாவில்தான் காஷ்மீரிகளுக்குப் பாதுகாப்பும், கெளரவமும் நிலைக்கும்-ப.சிதம்பரம்

காஷ்மீர் நிலவரத்தை நேரில் கண்டு ஆராய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு இன்று ஸ்ரீநகர் வந்து சேர்ந்தது.இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் வந்துள்ள இந்தக் குழு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக் குழுக்களின் பிரதிநிதிகளுடன் ஸ்ரீநகரில் ஆலோசனை நடத்தவுள்ளது. நாளை ஜம்முவுக்கும் இக்குழு பயணம் மேற்கொள்கிறது.
காஷ்மீரில் அமைதி திரும்ப என்ன செய்யலாம் என்பது குறித்து அரசுக்கு இந்தக் குழு பரிந்துரைக்கவுள்ளது.
ப.சிதம்பரம் தலைமையிலான இந்த 39 பேர் கொண்ட குழுவில் இந்தியாவின் முக்கிய கட்சிகள் பலவும் அங்கம் வகித்துள்ளன. காஷ்மீரின் ஹூரியத் மாநாட்டுக் கட்சி இதைப் புறக்கணித்து விட்டது.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரிவினைவாத தலைவர்களான கிலானி, மீர்வைஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர்கள் நிராகரித்து விட்டனர்.
இருப்பினும் கிலானியை மட்டும் வீட்டுக்கே போய் சந்திக்க இந்தக் குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தக் குழுவில் ப.சிதம்பரம் தவிர சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, முலாயம் சிங்யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், சரத் யாதவ், இ.அகமது, டி.ஆர்.பாலு, குருதாஸ் தாஸ் குப்தா, பாசுதேவ் ஆச்சார்யா, ராஜ்நிதி பிரசாத் தம்பிதுரை, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்ரீநகர் வந்தடைந்த பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தைக் கொடுக்க அனைவரும் உறுதி பூண்டுள்ளோம். இந்தியாவில் உள்ள காஷ்மீரில்தான் சிறந்த எதிர்காலமும், பாதுகாப்பும், கெளரவமும் நிலைக்கும் என்பதை காஷ்மீரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
காஷ்மீர் மக்களின் அனைத்துக் குறைகளையும் கேட்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்றார் சிதம்பரம்.
தேவைகளை பூர்த்தி செய்வோம்-பாலு:
ஸ்ரீநகர் கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு கூறுகையில்,
போராடிக்கொண்டிருக்கின்ற மக்களை அழைத்து கலந்துரையாடி, அவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேசி, அந்த தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்காக குழு அமைக்கப்பட வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக ஏற்றுக்கொண்டு, அனைத்துக் கட்சி குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு காஷ்மீர் மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறது. அதேபோல் நாளை ஜம்மு பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து மத்திய அரசுக்கு அறிக்கையாக தரப்படும். மத்திய அரசு இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கும் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications