தியாகியை அவமதித்த மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
கடலூர் : பென்ஷன் கேட்டு விண்ணப்பித்த தியாகி ஒருவரை அலையவிட்ட மத்திய மாநில அரசுகளு்ககு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் ஆர்.கண்ணன். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 1942-ம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டு சிறை சென்றேன். இதனால், தியாகி பென்ஷன் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு விண்ணப்பித்தேன். மேலும், அதற்கான முழு ஆதாரங்களையும் உரிய வகையில் அளித்துள்ளேன்.
ஆனால், போதிய ஆதாரம் இல்லை என்று கூறி எனது கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிராகரித்து விட்டன. இது தவறான செயலாகும். எனவே, எனக்கு பென்ஷன் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தமிழ்வாணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது,
மனுதாரருக்கு தியாகி பென்ஷன் வழங்க மறுப்பது தவறான செயலாகும். நாட்டிற்காக போராடிய அவரை இந்த வயதான காலத்தில் அலையவிட்டது கொடுமையானது. எனவே மனுதாரருக்கு 8 வாரத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் தியாகி பென்ஷன் வழங்க வேண்டும். அவர் மனு கொடுத்த 2003-ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு 12 சதவிகித வட்டியுடன் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications