நாகர்கோவிலில் ரூ.12.82 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம்: கருணாநிதி
நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரூ. 12.82 கோடி செலவில் புற்று நோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
நேற்று நாகர்கோவிலில் திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது முதல்வர் கருணாநிதி பேசியதாவது,
குமரி மாவட்டத்திலேயே போராடியவர்களுக்கு ஏன் பென்ஷன் தரக்கூடாது என்று கேட்டிருக்கிறார்கள். அது பற்றி ஆராய்ந்து உடனே அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு புதிதாக அமைக்க வேண்டும் என்று தினம் தினம் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பவர் அமைச்சர் சுரேஷ் ராஜன். தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி, கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள். இவர்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான, அறுவை சிகிச்சைக்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்ட போதிலும் ரேடியோ தெரபி தேவைப்படுவோர் உயர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். இதனால் புற்று நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதை ஏற்று நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் ரூ.12.82 கோடி செலவில் புற்றுநோய் உயர் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என நான் உறுதி கூறுகிறேன் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications