பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பிஎஸ்எப் ஜவான்-மன்னிப்பு கேட்டதால் விட்டனர் போலீஸார்
சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொல்லை கொடுத்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். ஆனால் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால் அந்தப் பெண் அவரை மன்னித்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் சுஹாசினி. இவரது செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்எம்எஸ் வந்தது. இதையடுத்து அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார் சுஹாசினி. மறு முனையில் பேசிய நபர், மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுஹாசினி அந்த நபரை எச்சரித்தார்.
இருப்பினும் தொடர்ந்து எஸ்எம்எஸ் வந்தபடி இருந்தது. இதையடுத்து தனது கணவருடன் அபிராமபுரம் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார் சுஹாசினி.
போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சுஹாசினியை விட்டு அந்த நபருக்கு போன் செய்து நைஸாக சென்னைக்கு அழைக்குமாறு அறிவுறுத்தினர்.அவரும் பேசி சென்னைக்கு வந்தால் பேசலாம் என்று கூறினார்.
இதையடுத்து சுஹாசினி குறிப்பிட்டுச் சொன்ன இடத்திற்கு அந்த நபர் டிப்டாப்பாக வந்து இறங்கினார்.அப்போது மறைந்திருந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.
அங்கு வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார்.விடுமுறைக்காக வந்த இடத்தில் இப்படி ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.
சபலபுத்தியால் இப்படிச் செய்து விட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன். மன்னித்து விடுங்கள் என்று காலில் விழுந்து கெஞ்சினார் அந்த 'வீரர்'. இதையடுத்து அவரை மன்னித்து விட்டுவிடுமாறு போலீஸாரிடம் தெரிவித்தார் சுஹாசினி.
இருப்பினும் ஜாமீனில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவில் ஒரு வழக்கைப் பதிவு செய்து அந்த வீரரை எச்சரித்து அனுப்பினர் போலீஸார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications