நெல்லை அதிமுக கூட்டத்தில் நைனார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் ரகளை
நெல்லை: நெல்லையில் நடந்த அதிமுக மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தின் வரவேற்பு உரையில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் பெயரை குறிப்பிடாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் நேற்று அதிமுக மாநகர் மாவ்ட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையான், பொள்ளாச்சி ஜெயராமன், கண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன், நயினார் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா மாநில நிர்வாகிகள் , மாநகர் மாவட்ட நிர்வாகிகள் என ஒவ்வொருவரின் பெயரை குறிப்பிட்டு வரவேற்றார். அப்போது முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பெயரை குறிப்பிடவில்லை என கூறி அவரது ஆதரவாளர்கள் குச்சல், குழப்பத்தி்ல் ஈடுபட்டனர்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த கட்சியின் மாநில நிர்வாகிகள் கூச்சலிட்ட அதிமுக பிரமுகர்களை சமரசம் செய்ய முயன்றும் பலனளிக்கவில்லை. கூச்சல், குழப்பம் நீடித்ததால் நயினார் நாகேந்திரன கட்சி நிர்வாகிகளை சமரசம் செய்தார்.